பாகுபலி படத்திற்குப் பிறகு இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக வலம் வரும் நடிகர் பிரபாஸ், திரையுலகில் வெற்றிகரமாக 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்தச் சூழலில், அவரது முதல் படம் மற்றும் தற்போதைய பிரம்மாண்ட வளர்ச்சி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் முறையாக ஹாரர் கதைக்களத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஹீரோவாக இவர் சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இவர் நடித்த முதல் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி, அவரது முதல் படம் ஈஷ்வர். இந்த படம் 2002-ம் ஆண்டு நவம்பர் 11 அன்று வெளியானது. வெறும் ரூ. 1 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 3.6 கோடி வசூலை ஈட்டியது.
பிரபாஸ் தனது முதல் படத்திற்கு சுமார் ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கினார். ஆனால், இப்போது அவர் ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.