உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்

1787724 potato finger chips

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 4
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – தேவையான அளவு
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
பொரிக்க எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை

நீளமான உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி விரல்களைப் போல மெல்லிய தடிமனான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அல்லது கட்டர் கொண்டு நறுக்கவும்.

நறுக்கிய உருளைக்கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு, மிளகு தூள் கலந்து நன்றாக கலந்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் ரெடி.

#LifeStyle

Exit mobile version