14
சினிமாசினிமாபொழுதுபோக்கு

சினிமாவை விட்டு விலகும் பிரபல இயக்குனர்

Share

சினிமாவை விட்டு விலகும் பிரபல இயக்குனர்

திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். சமீபத்தில் லோகேஷ் அளித்த பேட்டி ஒன்றில் தான் 10 படம் தான் இயக்குவேன் என்றும், அதன்பின் சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்றும் கூறியிருந்தார்.

இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் லோகேஷை போலவே பிரபல முன்னணி இயக்குனர் ஒருவரும் இதே முடிவில் தான் இருக்கிறாராம். அவர் வேறு யாருமில்லை பிரபல இயக்குனர் ஹெச். வினோத் தான். ஆம், கடைசியாக துணிவு எனும் மாபெரும் வெற்றியை கொடுத்த ஹெச். வினோத் அடுத்ததாக கமலை வைத்து படம் இயக்கவுள்ளார்.

இவரும் மொத்தமாக 10 படங்கள் மட்டுமே இயக்கிவிட்டு சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1500x900 44513924 7
பொழுதுபோக்குசினிமா

அஜித்குமார் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம்: மே 1-ல் திரையரங்குகளில் வெளியாகிறது “My Game Is Beyond Pain”!

திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் சவாலான கார் பந்தயப் பயணத்தை...

MediaFile 3 8
பொழுதுபோக்குசினிமா

இலங்கை வந்தார் ‘இந்திய மைக்கேல் ஜாக்சன்’ பிரபு தேவா!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், புகழ்பெற்ற நடன இயக்குநருமான பிரபு தேவா இன்று (30) இலங்கையை...

BeFunky 40 scaled 1
பொழுதுபோக்குசினிமா

அதிர்ச்சியில் சின்னத்திரை: கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை!

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற ‘கௌரி’ சீரியலில் நடித்து வந்த இளம் நடிகை நந்தினி,...

25 6952424d7d3f6
பொழுதுபோக்குசினிமா

உலகளவில் 6,000 கோடியைக் கடந்த அவதார் 3: 10 நாட்களில் பிரம்மாண்ட வசூல் சாதனை!

ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ (Avatar 3)...