ஷாருக் படத்தில் மீண்டும் பிரபல நடிகை

1623901416 chennai express song

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகை பிரியாமணி நடனமாடியுள்ளதாகவும் இந்த பாடல் படத்தின் முக்கிய பாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் பிரியாமணி நடனமாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#cinema

Exit mobile version