வசூலை அள்ளிக்குவிக்கும் பொன்னியின் செல்வன்2!

download 5 1 20

வசூலை அள்ளிக்குவிக்கும் பொன்னியின் செல்வன்2!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று.

முதல் பாகம் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. பொன்னியின் செல்வன் -2 இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் உலகமுழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி இல்லாததால் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கின.

படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. பொன்னியின் செல்வன் -2 இந்த நிலையில், படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்

#cinema

Exit mobile version