12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

Share

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மணமக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாளை (26) நடைபெறவுள்ள இவர்களது பிரம்மாண்ட திருமணத்திற்குப் பிரதமருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குடும்பத்தினருக்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ள பிரதமர், இது ஒரு மங்களகரமான மற்றும் மகிழ்ச்சியான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார். “விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவருக்குமே சினிமா திரைக்கதைகள் புதியதல்ல. ஆனால், அன்பும் பாசமும் நிறைந்த இந்த நிஜ வாழ்க்கை, அவர்கள் வெள்ளித்திரையில் உருவாக்கிய மாயாஜாலத்தை விட நிச்சயம் மிளிரும்” எனப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் இந்த ஜோடி ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என அவர் தனது கடிதத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்து திருமணச் சடங்கின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் ‘சக சப்தபத பவா’ (ஏழு அடிகள் ஒன்றாக நடத்தல்) என்ற தத்துவத்தைக் குறிப்பிட்டு, இந்தத் தம்பதியினர் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாகவும், துணையாகவும் திகழ வேண்டும் எனப் பிரதமர் நெகிழ்ச்சியுடன் ஆசி வழங்கியுள்ளார். நீண்டகாலமாக நிலவி வந்த இவர்களது காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமையவுள்ள இந்தத் திருமணத்திற்கு, சினிமா பிரபலங்கள் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...