டேட்டிங் பற்றி பிாியங்காசோப்ராவின் பதிவு!

download 13 1 5

பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். பிரியங்கா சோப்ரா தற்போது நடித்திருக்கும் ‘லவ் அகெய்ன்’ என்ற திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

படத்தின் பெயர் ‘லவ் அகெய்ன்’ என்பதால், பாலிவுட்டில் தனது பழைய நண்பர்களைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். நிக் ஜோன்ஸை சந்திப்பதற்கு முன்பு அவர் ஷாகித் கபூர், ஹர்மான் பவேஜா, ஷாருக்கான், ஆகியோருடன் காதலில் இருந்த காலத்தில் இந்தியாவில் தலைப்புச்செய்திகளில் பேசப்பட்டதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:-நான் டேட்டிங் செய்த அனைவருமே அற்புதமானவர்கள். நான் எப்படியெல்லாம் எங்கள் நட்பு இருக்க வேண்டும் என்பதை நினைத்தேனோ அப்படியெல்லாம் இருந்தோம் என்று அவர் கூறினார்.

#Cinema

Exit mobile version