மொட்டை இராஜேந்திரனுக்கு ஜோடியாக ரேகா

WhatsApp Image 2021 10 04 at 4.50.49 PM

reka

பேய் மாமா படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரேகா.

நடிகை ரேகாவின் நகைச்சுவை நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பில் நடிகை ரேகா குறிப்பிடும் போது ‘ கடலோரக்கவிதைகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான போது எப்படி உற்சாகப்படுத்தினார்களோ. அதைப் போலவே திருமணத்திற்கு பின்னர் குணச்சித்திர நடிகையாக நடிக்க வந்த போதும் உற்சாகத்தை தந்தீர்கள். எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாகவுள்ளது.

பேய்மாமா படத்தில நடிக்க அழைத்த போது முதலில் தயக்கம் காட்டியிருந்தேன். ஆனால் எனது உள் மனது இந்த திரைப்படத்தில் நடிப்பதால் என்ன குறைச்சல் வந்துவிடப் போகிறது என கூறியது.

ஒரு வட்டத்திற்குள்தான் நடிப்பேன் என நம்மை அடைத்துவிடக்கூடாது. தற்போது என்னால் நகைச்சுவை வேடங்களில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களின் வாழ்த்துக்கள் மூலம் கிடைத்துள்ளமை மகிழ்ச்சியைத் தருகின்றது’ என கூறியுள்ளார்.

Exit mobile version