வசூல் வேட்டையில் ‘பதான்’

pathaan shah rukh khan deepika padukones sizzling chemistry in new song besharam rang left fans gasping for air netizens thirsty comments are to watch out for 001

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 25-ஆம் திகதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘பதான்’ படத்தின் வசூல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ.865 கோடியை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து ‘பதான்’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

#cinema

Exit mobile version