நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படமான ‘பராசக்தி’ அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்குத் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கி வரும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுப் படக்குழுவினர் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் நடந்து வருவது மட்டுமே காட்டப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவிட்டதாகவும், பொங்கல் வெளியீட்டிற்குத் தயாராகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.