tamilni 236 scaled
சினிமாபொழுதுபோக்கு

20 வயது இளம் நடிகையுடன் நடிக்க போட்டி போடும் வயதான நடிகர்கள்

Share

20 வயது இளம் நடிகையுடன் நடிக்க போட்டி போடும் வயதான நடிகர்கள்

20 வயது இளம் நடிகையுடன் 50 வயது, 60 வயதுக்கு மேல் உள்ள பிரபல நடிகர்கள் நடிக்க போட்டி போட்டு வருவதாகவும், 48 வயதுடைய நம்மூர் சூர்யாவும் அந்த நடிகையுடன் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகில் பிஸியான நடிகையாக உள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ’கிஸ்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நிலையில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதையடுத்து கன்னடத்தில் தொடர்ந்து சில படங்கள் நடித்தார்.

அதன் பிறகு அவருக்கு ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ராம் பொத்தினேனி நடித்த ‘ஸ்காண்டா’ என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தெலுங்கின் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின் ’குண்டூர்காரம்’ படத்திலும் ஸ்ரீலீலா தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் உள்ள 50 மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள முன்னணி நடிகர்கள் ஸ்ரீலீலா உடன் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் நாயகியாக ஸ்ரீலீலாவை ஒப்பந்தம் செய்யும்படி வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழில் கூட சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படம் ஆன ’புறநானூறு’ என்ற திரைப்படத்தில் ஸ்ரீலீலாவை ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 20 வயது மட்டுமே ஆன ஸ்ரீலீலா தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் அவருடன் நடக்க 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆசைப்படுவது திரை உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...