ஹிந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகனும் தீபிகா படுகோனின் கணவருமாகிய ரன்வீர் சிங்சில தினங்களுக்கு முன்பு நிர்வாணமாக நடத்தியிருந்த போட்டோ சூட் புகைப்படங்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
குறித்த புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், இவரது நிர்வாணப் புகைப்படத்திற்கு பலர் ஆதரவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரபல நிறுவனம் ஒன்று மீண்டும் நிர்வாணமாக நடிக்க ரன்வீர் சிங்கிடம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே எடுத்த போட்டோ ஷூட் சர்ச்சை முடிவடையாத நிலையில், தற்போது இந்த செய்தி சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
#cinema