விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இதனை தற்போது விக்ரம் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Cinema
Leave a comment