நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் நிச்சயதார்த்தம் முடிந்தது

24 6684d08f44f46

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் நிச்சயதார்த்தம் முடிந்தது

நடிகர் நெப்போலியன் 90களில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர். அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.அவருக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

அவரது மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் நான்கு வயதிலேயே பாதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.

அதற்காக நடிகர் நெப்போலியன் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழை கமெண்டில் பொழிந்து வருகின்றனர்.

Exit mobile version