பிரபல மலையக நடிகர் காலமானார்!

‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாளமயம்’ உட்பட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு
இன்று காலமானார்.

காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்.

nedumudi 1
தற்போது இயக்குநர் சங்கரின் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடிகர் நெடுமுடி வேணு நடித்து வந்தார்.

1978ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நெடுமுடி வேணு, அதற்கு முன் நாடகங்களில’ நடித்தார்.

500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள வேணு, மூன்று தேசிய விருதுகள் மற்றும் ஆறு மாநில திரைப்பட விருதுகளையும்
பெற்றுள்ளார்.


அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட நடிகர் வேணு, நேற்றைய தினம் திடீர் உடல்நலக்குறைவால், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் வேணு, சிகிச்சை பலனின்றி, இன்று காலமானர்.

தமிழ் மற்றும் மலையக இரசிகர்களுக்கு அவரது மறைவு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Exit mobile version