லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தவிர கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது அவர் முதல் முறையாக கமல்ஹாசன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதியானால் கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்தில் முதன் முறையாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#cinema