ஒரு சின்ன டெக்னிக்கல் மிஸ்டேக் தான் ஏற்பட்டது, அதற்கு விவாகரத்து வரை போயிட்டீங்களே, என ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பயனாளிகளிடம் நடிகை நயன்தாரா தரப்பு வருத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு தொடங்கிய போது அதில் ஒரு சிலரை மட்டுமே அவர் ஃபாலோ செய்து வந்தார். அவர்களில் ஒருவர் தான் அவரது கணவர் விக்னேஷ் சிவன் என்பதும் இருவரும் சேர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் திடீரென அவர் ஃபாலோ செய்யும் பட்டியலில் விக்னேஷ் சிவன்பெயர் நீக்கப்பட்டதை அடுத்து பல்வேறு செய்திகள் இணையத்தில் உலாவி வந்தது. குறிப்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் விக்னேஷ் சிவனை நயன்தாரா பிரிய போகிறார் என்றும் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற ரீதியில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரபரப்பாக வெளியானது.
இந்த நிலையில் இது குறித்து நயன்தாரா தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட டெக்னிக்கல் மிஸ்டேக் காரணமாக ஃபாலோயர்கள் சில பெயர்கள் இடம் பெறவில்லை என்றும், அதன் பிறகு சில மணி நேரத்தில் மீண்டும் அந்த டெக்னிக்கல் மிஸ்டேக் சரி செய்யப்பட்டது என்றும், ஆனால் அதற்குள் விவாகரத்து வரை சென்று விட்டீர்களே என ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பயனாளிகளிடம் நயன்தாரா தரப்பு வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது மீண்டும் அவரது ஃபாலோயர்கள் லிஸ்ட்டில் விக்னேஷ் சிவன் பெயர் இருப்பதை அடுத்து இருவருக்கும் இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

