Capture 7
சினிமாபொழுதுபோக்கு

கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா! என்ன செய்தார் தெரியுமா?

Share

இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தெரியாமல் உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபா வளாகத்தில் பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் இருதரப்பு நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தும் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது 3 பிறந்த நாள் கேக்குகள் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதில் முதலாவது கேக்கில் ‘ஹேப்பி பர்த் டே மகனே’ என்றும், 2-வது கேக்கில் ‘ஹேப்பி பர்த் டே விக்கி சார்’ என்றும் 3-வது கேக்கில் ‘ஹேப்பி பர்த் டே உலகம்’ என்றும் எழுதப்பட்டு இருந்தது.

இதில் உலகம் என குறிப்பிட்ட கேக் நயன்தாராவின் சார்பில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த விக்னேஷ் பூரிப்படைந்துள்ளார்.

தனது பிறந்தநாள் குறித்து விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளதாவது, ஒரு அன்பான குடும்பத்தின் தூய்மையான அன்பினால் நிரப்பப்பட்ட பிறந்தநாள். என் மனைவியால் அற்புதமான ஆச்சரியம், என் தங்கம். புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே எனது அன்பான மக்கள் அனைவருடனும் ஒரு மறக்கமுடியாத பிறந்தநாள்! இதை விட சிறப்பாக பெற முடியாது.

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவர் எனக்குக் கொடுத்த அனைத்து அழகான தருணங்களுக்காக எப்போதும் கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது புர்ஜ் கலீபா கட்டிடத்தின் கீழ் இருவரும் நெருக்கமாக நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#Vigneshshivan #nayanthara

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...