‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – வைகைப்புயல் குரலில் வைரலாகும் முதல் பாடல்

1792021 naai2

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’.

இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘அப்பத்தா’ என்ற வரிகளில் தொடங்கும் இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#Cinema

Exit mobile version