நாக சைதன்யா பொறுப்பானவர்”: நாகார்ஜுனா மனைவி அமலா உருக்கம்!

20251126110454 amala

தெலுங்கு திரையுலகின் மூத்த முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான அமலா, நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமான நாக சைதன்யா குறித்துப் பேசிய விடயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமலா ஒரு பேட்டியில் “நாகார்ஜுனாவை நான் திருமணம் செய்த பின் எனக்கு நாக சைதன்யா குறித்து எதுவும் தெரியாது. அதற்குக் காரணம் நாக சைதன்யா சென்னையில் வளர்ந்தார்.

கல்லூரிக்கு ஹைதராபாத் வந்தபோதுதான் அவரை முழுமையாக அறிந்தேன். நாக சைதன்யா அற்புதமானவர், பொறுப்பானவர். தந்தையின் பேச்சை மீறமாட்டார்.

அகில் என் மகன் என்பதால் என் தாக்கம் அதிகம். இருவரையும் சுதந்திரமாக வளர்க்க நானும் நாகார்ஜுனாவும் முடிவு செய்தோம்” என்று அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

நாகார்ஜுனா தனது முதல் மனைவி லட்சுமி ராமகிருஷ்ணனைப் பிரிந்த பிறகு அமலாவைத் திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யா நாகார்ஜுனா – லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதியரின் மகன் ஆவார்.

Exit mobile version