நாகசைதன்யா டேட்டிங் செய்து வருவதாக தீயாய்பரவும் கிசுகிசுக்கள்!

download 16 1 1

நாகசைதன்யா -சமந்தா  இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். சமீபகாலமாகவே நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகசைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

சோபிதா துலிபாலா -நாகசைதன்யா இந்நிலையில், நடிகை சமந்தா, “யார் யாருடன் உறவில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும்.

குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என நாகசைதன்யா -சோபிதா துலிபாலா உறவு குறித்து கூறியதாக தனியார் பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா ‘தான் இவ்வாறு கூறவில்லை’ என்று மறுத்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
#cinema

Exit mobile version