தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் (DSP), முதல்முறையாகத் திரையில் நாயகனாக அவதாரமெடுக்கிறார்.
இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘குபேரா’ படத்தில் தனுஷ் பாடியுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் வேணு யெல்டாண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகின்றார்.
வேணு யெல்டாண்டி ‘பாலகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். ‘எல்லம்மா’ திரைப்படத்தின் கிளிம்ஸ் காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

