இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur), தன்னைப் பற்றிச் சமூக வலைதளங்களில் பரவி வரும் காதல் வதந்திகளுக்குச் சலிப்புடன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் இவரைப் பற்றி இரண்டு விதமான வதந்திகள் பரவின. தனுஷ் உடனான காதல்: கடந்த வாரம் நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் காதலிப்பதாகத் தகவல்கள் பரவின. இதற்கு முன்னர், “இலவச விளம்பரம்” என்று கிண்டலாக மிருணாள் தாகூர் பதிலளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை (Shreyas Iyer) மிருணாள் தாகூர் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. இந்த வதந்திகள் குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த மிருணாள் தாகூர்,
“அவர்கள் பேசுவது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. வதந்திகள் எப்போதுமே இலவச விளம்பரம்தான். அது எனக்குப் பிடித்திருக்கிறது,” என்று கிண்டலான தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வரும் மிருணாள் தாகூர், அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.