9 11
சினிமாபொழுதுபோக்கு

திரையில் தற்போது தோன்றாதது ஏன்.. மனம் திறந்த நடிகை மிருணாள் தாகூர்

Share

திரையில் தற்போது தோன்றாதது ஏன்.. மனம் திறந்த நடிகை மிருணாள் தாகூர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி நட்சத்திரமாக மாறியவர் நடிகை மிருணாள் தாகூர். மராத்தி மொழியில் திரைப்படங்கள் நடிக்க துவங்கிய இவர், பின் ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார்.

ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த படம் என்றால் அது சீதா ராமம். கடந்த 2022ல் வெளிவந்த சீதா ராமம் படத்தில், மிருணாள் தாகூர் ஏற்று நடித்த நூர்ஜகான் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.

இதன்பின், நானியுடன் இணைந்து Hi nana படத்தில் நடித்தார். இப்படமும் மிருணாள் தாகூருக்கு வெற்றியை தேடி தந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘பேமிலி ஸ்டார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை.

இவர் நடிப்பில் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் மிருணாள் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், “ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை விரும்புகிறார்கள். அதனால் நான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறேன். முழுவதுமாக ஒரு படத்தில் கவனம் செலுத்தாமல் பல படங்களில் கையெலுத்திடுபவள் நான் இல்லை. அதனால் நல்ல கதாபாத்திரத்திற்காக காத்து கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...