முதல் ஹீரோவுடன் 32 ஆண்டுகள் கழித்து நடிக்கும் மீனா! யாருடன் தெரியுமா?

நடிகை மீனா பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் உடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’நவயுகம்’ என்ற திரைப்படத்தில் நடிகை மீனா நாயகியாக அறிமுகமானார் என்பதும் அந்த படத்தில் ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் 32 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ’32 ஆண்டுகள் கழித்து என்னுடைய முதல் ஹீரோவுடன் நான் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

dd

#CinemaNews

Exit mobile version