மொத்த படங்களையும் காலி செய்த சுந்தர். சி.. ஆல் ரவுண்டராக கலக்கும் மதகஜராஜாவின் கலெக்சன்?
12 வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் மதகஜராஜா. இந்த படத்தை சுந்தர். சி இயக்க, அதில் விஷால், சந்தானம், அஞ்சலி, மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்த ஆண்டின் பொங்கல் ரிலீஸ் ஆக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. காமெடி, ஆக்சன், திரில்லர் கலந்த பாணியில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த படம் வசூல் ரீதியிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றது.
இந்த நிலையில், மதகஜராஜா திரைப்படம் வெளியாகி 8 நாட்களைக் கடந்துள்ள நிலையில் அதன் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி மதகஜராஜா திரைப்படம் மொத்தமாகவே 45 கோடிகளை வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் அதிகார்வ பூர்வமான தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த படம் தொடர்பில் ரசிகர்கள் தொடர்ந்து பாசிட்டிவான கருத்துக்களை வெளியிட்டு வருவதால் காலை, மாலை மற்றும் இரவு என அனைத்து காட்சிகளுக்கும் வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதிலும் கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியானது. ஆனாலும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று சரிவை சந்தித்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளிலும் மதகஜராஜா திரைப்படம் திரையிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.