‘பைசன் காளமாடன்’ 2 நாட்களில் உலகளவில் ரூ. 12+ கோடி வசூல்!

25 68f4540565042

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

துருவ் விக்ரமுடன் இணைந்து பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

திரைப்படம் வெளியாகும் போது அதன் வசூல் நிலவரம் குறித்த ஆர்வம் இருப்பது வழக்கம். அந்த வகையில், ‘பைசன் காளமாடன்’ படத்தின் இரண்டு நாட்கள் (2 Days) உலகளாவிய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 12+ கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்குக் கிடைத்துள்ள நல்லதொரு தொடக்க வசூலாக (Opening) பார்க்கப்படுகிறது.

Exit mobile version