துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்திற்காக மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ்… ஏன் தெரியுமா?

image 1200x630 5

பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் பைசன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்துள்ள இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக உள்ளது.

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவியது என்றாலும் தனது அரசியல் பார்வையை ஒரு புனைவு கதையாக உருவாக்கியுள்ளதாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.

பைசன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகள் படு மாஸாக நடந்துள்ளது.

தற்போது இப்படத்திற்கு Bison என ஆங்கில பெயர் வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர், பைசன் படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை கடந்து படத்தை கொண்டு செல்ல ஏதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது. என்னுடைய திரைப்பதை புத்தகத்தில் இன்னமும் காளமாடன் என்ற தான் தலைப்பு உள்ளது என கூறியுள்ளார்.

Exit mobile version