2 47
சினிமாபொழுதுபோக்கு

அலைபாயுதே படத்திற்கு மணிரத்னம் முதலில் தேர்வு செய்தது மாதவன்-ஷாலினி இல்லையா?.. இந்த ஹிட் ஜோடியா

Share

அலைபாயுதே

படத்திற்கு மணிரத்னம் முதலில் தேர்வு செய்தது மாதவன்-ஷாலினி இல்லையா?.. இந்த ஹிட் ஜோடியா

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி ஆகியோர் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த படம் அலைபாயுதே.

இளம் டாக்டரான சக்திக்கும் சாப்ட்வேர் இன்ஜீனியரான கார்த்திக்கும் இடையே மலரும் காதலை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ஒரு எவர்கிரீன் ஹிட் படம் என்றே கூறலாம், இப்போது வரை படத்தின் புரொபோசல் சீன் முதல் பாட்டுகள் வரை டிரெண்டிங்கில் உள்ளது.

24 ஆண்டுகள் கழித்து மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி செம வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம், படம் குறித்து நிறைய சீக்ரெட்ஸ் பகிர்ந்துள்ளார். இப்படத்திற்கு நான் முதலில் தேர்வு செய்தது மாதவன் மற்றும் ஷாலினி கிடையாது.

நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோல் வைத்து இயக்க முதலில் திட்டமிட்டு இருந்தேன். ஷாருக்கானும் இந்தக் கதைக்கு ஓகே சொல்லியிருந்தார், ஆனால் இந்த படத்தின் கதை எப்படி அமைய வேண்டும் என்பது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை.

அதனால் அலைபாயுதே படத்தை எடுக்காமல் தில் சே படத்தை இயக்கினேன். தில் சே படத்திற்கு பிறகு தான், அலைபாயுதே கதையில் ‘எது மிஸ் ஆகிறது’ என்பதை முன்னர் நினைத்தேனோ, அதை கண்டுபிடித்தேன் என்று கூறியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...

12 1763393832
சினிமாபொழுதுபோக்கு

மகாராஜா பட நடிகை சாச்சனாவுக்கு புதிய கார் பரிசளித்த ரசிகர்கள்: மகிழ்ச்சியில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிப் பிரபலமான ‘மகாராஜா’ திரைப்படத்தில் மகளாக நடித்ததன் மூலம்...

12 1763392008
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் குருநாதர் முன்னாள் இயக்குநர் கே.எஸ். நாராயணசாமி காலமானார் – ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி, இந்தியத் திரையுலகின் பல...

124994710
சினிமாபொழுதுபோக்கு

திரும்பி வருகிறார் இயக்குநர் பேரரசு: 10 ஆண்டுகள் கழித்து அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி போன்ற வெற்றிப் படங்களை அளித்த இயக்குநர் பேரரசு, சுமார்...