ராட்சசன் கூட்டணியில் இணைந்த சென்சேஷனல் மலையாள நடிகை

tamilnif 11

ராட்சசன் கூட்டணியில் இணைந்த சென்சேஷனல் மலையாள நடிகை

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரில்லர் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று ராட்சசன். இப்படத்தை ராம் குமார் இயக்க விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்திற்கு பின், மீண்டும் இதே கூட்டணி அமைந்துள்ளது. ஆம், விஷ்ணு விஷாலின் 21வது படத்தை ராம் குமார் தான் தற்போது இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது விஷ்ணு விஷால் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பின் இப்படத்தையும் திரில்லர் கதைக்களத்தில் தான் ராம் குமார் உருவாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இப்படத்தை முழுமையான காதல் Fantasy கதைக்களத்தில் தான் எடுத்து வருகிறாராம். இந்த நிலையில், மலையாள திரையுலகின் சென்சேஷனல் நடிகையான மமிதா பைஜூ தான் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம்.

சமீபத்தில் பிரேமலு எனும் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ள நடிகை மமிதா பைஜூ, ஜி.வி. பிரகாஷின் ரெபல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதை தொடர்ந்து விஷ்ணு விஷால் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version