ரஜினியின் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா

23 63f5de449231f

ரஜினியின் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ்.

முதல் படத்திலேயே மக்களின் கனவத்தை ஈர்த்தவர் அடுத்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். பாடல்களே இல்லாமல் அழுத்தமான கதையை வைத்து இயக்கிய லோகேஷ் கனகராஜிற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது.

அடுத்து விஜய்யுடன் கூட்டணி வைத்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிறகு கமலை வைத்து விக்ரம் இயக்கியவர் அடுத்து விஜ்ய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கினார்.

விக்ரமிற்கு கிடைத்த வெற்றி அவருக்கு லியோவில் அவ்வளவாக கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

லியோவை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் 171வது படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைத்துள்ளனர். மாஸ் டீசரோடு படத்தின் பெயரை படக்குழு அறிவித்தார்கள்.

இந்த நிலையில் ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜ் இப்படத்திற்காக ரூ. 60 கோடி வரை சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version