கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
‘கூலி’ படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்து கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளிவந்தது. ரஜினியும் கமலும் இது உண்மையே என்று உறுதிப்படுத்தியிருந்தாலும், இயக்குநராக லோகேஷ் தான் இருப்பாரா என்று வெளிப்படையாகக் கூறவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், கே.வி.என் நிறுவனம் தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது.
லோகேஷ் – பவன் கல்யாண் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.