கணவர் 2 ஆண்டுகள் சும்மா இருந்தார்.. நடிகை குஷ்பூ கூறிய தகவல்

24 664c6f6998eac

சமீபகாலாமாக தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் கில்லி திரைப்படமும் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அந்த வகையில் கமல் ஹாசன் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அன்பே சிவம் படத்தையும் ரீ-ரிலீஸ் செய்யும்படி ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில், இதுகுறித்து சுந்தர் சி-யின் மனைவியும் பிரபல நடிகையும் குஷ்பூவும் பேசியுள்ளார்.

“அன்பே சிவம் படத்தையெல்லாம் ரீ ரிலீஸ் செய்ய முடியாது. அந்த படம் எடுத்த பின் என்னுடைய கணவர் சுந்தர் சி 2 ஆண்டுகளாக வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தார். ஆனால் இப்போது அந்த படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

இந்த படம் ரிலீசான சமயத்தில் தியேட்டரில் போய் பார்த்து வெற்றி பெற வைத்திருந்தால் என் கணவர் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டாரு. ஆனால் எது நடந்தாலும் நன்மை என சொல்வோம். அந்த மாதிரி அன்பே சிவம் ஓடவில்லை என்றாலும் நன்மைக்கே என எடுத்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் அப்படத்திற்கு பின் தான் நாங்கள் எங்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி கிரியேஷன்ஸை துவங்கினோம். அன்பே சிவம் மட்டும் ஓடியிருந்தால் நாங்கள் இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கவே மாட்டோம்.

சுந்தர் சி இயக்கிய சிறந்த படங்களில் அன்பே சிவம் மிக முக்கியமான படம் அந்த படத்துக்காக அவர் ஒவ்வொரு Frame-க்கும் உழைத்தார்” என குஷ்பூ கூறினாராம்.

Exit mobile version