இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 2020-ம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஐந்து பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் சிறந்த திரைக்கதைக்கான விருது ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்கரா இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த பியூச்சர் ஃபிலிம் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
#sooraraipottru #suriya
Leave a comment