லண்டனில் வீடு வாங்கியுள்ளாரா குஷ்பு! ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலடி

kushboo sundar thumb1634909040

சமீபத்தில் லண்டன் சென்ற நடிகை குஷ்பு ஒரு வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து “என்னுடைய புதிய வீட்டில் முதல் கப் டீ சாப்பிடுகிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து பலர் கமெண்ட்ஸ் பகுதியில் லண்டனில் புதிய வீடு வாங்கி விட்டீர்களா? உங்களுக்கு இருக்கும் பணத்தில் உலகத்திலுள்ள எங்கு வேண்டுமானாலும் வீடு வாங்கலாம் என்று கமெண்ட் செய்தனர்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறி கமெண்ட்கள் பதிவானதால் குஷ்பு காட்டமாக அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

என்னை சுற்றி பல தோல்வி அடைந்த, பொறாமை கொண்டவர்களை நான் பார்க்கின்றேன். லண்டனில் புதிய வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால் அது சொந்த வீடு என்று அர்த்தமா? முட்டாள்களே, நீங்கள் வாடகை வீடு என்று ஒன்று இருப்பதை பற்றி கேள்விப்பட்டதே இல்லையா? ஒரு பெண் சுதந்திரமாகவும் வெற்றிகரமாகவும் இருந்தால் ஏன் பலருக்கு பார்ப்பதற்கு வலிக்கிறது என்பது எனக்கு புரியவில்லை’ என்று பதிவு செய்துள்ளார்.

அவருடைய இந்த பதிவை அடுத்து லண்டனில் அவர் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

#Cinema # Kushboo

Exit mobile version