உலக நாயகன் கமல் ஹாசன், குஷ்பு நடித்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் கமல் ,குஷ்பூ நடனமாடிய ரம் பம் பம் என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது.
தற்போது இந்த பாடல் மீண்டும் குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் உருவான காபி வித் காதல் என்ற படத்தில் புதிய பாணியில் வெளியாகவுள்ளது.
இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இந்த பாடல் இன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நடிகர்களும், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும் நடிக்கும் திரைப்படத்தில் விஜய் டிவி பிரபலம் டிடி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
https://www.instagram.com/tv/Cfbns6TJPbQ/?utm_source=ig_web_copy_link
#cinema #kushboo