விஜய் பாடலுக்கு நடனமாடிய கத்ரினா கைப்.. வைரலாகும் வீடியோ!

1768234 kat

நடிகை கத்ரினா, மதுரையில் பள்ளிக்குழந்தைகள் சிலருடன் ‘அரபிக்குத்து’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக, இந்தியாவின் நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டு மதுரையில் மவுண்டன் வியூ பள்ளி திறக்கப்பட்டது.

இந்த பள்ளியை கத்ரினா கைபின் தாயார் சுசானே நீண்ட காலமாக அவரின் அறக்கட்டளை மூலமாக நடத்தி வருகிறார். சுசானே இந்த பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.

கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கத்ரினா கைப் சமீபத்தில் பங்கேற்று, குழந்தைகளுடன் நடனமாடியிருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ வேகமாகி வைரலாகி வருகின்றது.

#katrina kaif

Exit mobile version