25-வது ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடி வரும் சூர்யா! கார்த்தியின் பதிவு இணையத்தில் வைரல்

Karthi and suriya 0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக சூர்யா இயக்குனர் சினிமா திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகிவிட்டது.

திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இது தொடர்பாக சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில், “கனவு காணுங்கள், நம்புங்கள்” என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இதனிடையே நடிகர் கார்த்தி, சூர்யா குறித்து தனது இணைய பக்கத்தில், “அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்ற இரவும் பகலும் உழைத்தார். அவர் தன் சொந்த சாதனையை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

ஒரு நபராக, அவர் ஏற்கனவே தாராளமான இதயத்தை இன்னும் பெரிதாக்கினார் மற்றும் ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார்.” என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதனை பார்த்த சூர்யா கிண்டலாக கார்த்தியின் பதிவை பகிர்ந்துள்ள சூர்யா “வந்தியத்தேவா… அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இந்தப்பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

#Karthi #Surya #Cinema

Exit mobile version