24 66079e12ae3e0
சினிமாபொழுதுபோக்கு

சர்ச்சை பட இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி

Share

சர்ச்சை பட இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும், 96 இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி சர்தார் 2 திரைப்படமும் உருவாகவுள்ளது. இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது. இந்த நிலையில், கார்த்தியின் மற்றொரு புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சர்ச்சை இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி, கார்த்தியுடன் இணையப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி தற்போது ஒரு படத்தில் பணிபுரிந்து வருகிறாராம்.

இப்படத்திற்கு பின் கார்த்தி படத்தை இயக்கப்போவதாக அவரே சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அனிமல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கிய இயக்குனருடன் கார்த்தி இணையப்போகிறாரா என தற்போதே பலரும் கேட்டு வருகிறார்கள். இந்த கூட்டணி அமைகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....