நயன்தாரா பெரிய நடிகை இல்லை – சர்ச்சையில் சிக்கிய கரண் ஜோகர்

239255 samantharuth

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்து தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா பெரிய நடிகை இல்லை என்று இழிவுபடுத்தி விட்டதாக பிரபல இந்தி டைரக்டர் கரண் ஜோகருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அவர் தொகுத்து வழங்கும் காபி வின் கரன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நடிகை சமந்தாவிடம், கரண் ஜோகர் தென் இந்திய திரைப்பட துறையில் பிரபலமான நடிகை யார் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சமந்தா தென் இந்திய சினிமாவில் நயன்தாராதான் பெரிய நடிகை என்றார். உடனே கரண் ஜோகர் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பு பட்டியலில் நயன்தாரா பெயர் இல்லை என்றார்.

தற்போது அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளானது. நயன்தாரா ரசிகர்கள் தற்போது கரண் ஜோகருக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

#KaranJohar #Nayanthara #Samantha

Exit mobile version