மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த ‘கங்குவா’ மோஷன் போஸ்டர்!

download 11 1 7

மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த ‘கங்குவா’ மோஷன் போஸ்டர்!

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடிக்கும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கங்குவா தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த மோஷன் போஸ்டர் ஒரே நாளில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. ‘கங்குவா’ திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#cinema

 

Exit mobile version