‘தக் லைஃப்’ ஷூட்டிங்கில் அசம்பாவிதம்! அவசர சிகிச்சைக்காக லண்டன் பறந்த கமல்!

tamilni 79

‘தக் லைஃப்’ ஷூட்டிங்கில் அசம்பாவிதம்! அவசர சிகிச்சைக்காக லண்டன் பறந்த கமல்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தக் லைஃப்’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன.

‘தக் லைஃப்’ திரைப்படத்தில், தமிழ்த் திரையுலகின் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தது.

அதுபோல, பிரபல மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் அவர்களும் இந்த படத்தில் இணைந்து உள்ளார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போது கமல் லண்டன் சென்றுள்ளதால் தக் லைஃப் ஷூட்டிங் திடீரென கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது, நீண்ட நேரமாக படப்பிடிப்பில் இருந்ததால் தான் கமலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் உடனடியாக அவர் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இரண்டாவது ஷெட்யூலில் கமல் இல்லாமல், துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோரது போர்ஷனை மட்டும் ஷூட் செய்ய மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம்.

அத்துடன், கமல்ஹாசனும் லண்டனில் இருந்து திரும்பிய பின்னர் தக் லைஃப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version