விஜய்யின் லியோவில் இணையும் கமல்

விஜய்யின் லியோவில் இணையும் கமல்

விஜய்யின் லியோவில் இணையும் கமல்

விஜய்யின் லியோவில் இணையும் கமல்

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

மாஸ்டரைத் தொடர்ந்து லியோ படத்தையும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யின் உறவினரான லலித் குமார், லியோ படத்திற்காக பல கோடி ரூபாயை வாரி இறைத்துள்ளாராம். இதனிடையே விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர், இனி தனது படங்களில் ‘LCU’ இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதனால், லியோவும் LCU படமாக இருக்குமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அதாவது விக்ரம் படத்தின் முந்தைய பாகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கமல், ஃபஹத் பாசில் ஆகியோர் நடிக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது கமல் இல்லையென்றாலும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது. லோகேஷின் யுனிவர்ஸ் கைதியில் இருந்தே தொடங்கினாலும், விக்ரம் படத்தில் தான் மற்ற கேரக்டர்களை இணைத்தார். அதனால் லியோ தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸின் பெயரும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. மேலும், லியோ திரைப்படத்தை LCU என அறிவித்துக்கொள்ள கமலும் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்.

இதனால், லியோவில் விக்ரம் படத்தின் சில காட்சிகளையும் கமலின் வாய்ஸ் ஓவரை மட்டும் வைக்க லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். அதேபோல், ஃபஹத் பாசில், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் லியோவில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

படம் வெளியாகும் போதே அனைத்து சர்ப்ரைஸ் அப்டேட்களையும் வெளியிட வேண்டும் என விஜய் தரப்பில் இருந்து கண்டிஷன் போடப்பட்டுள்ளதாம். இதனால், லியோ மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

Exit mobile version