அதிகாரப்பூர்வமாக வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.. கல்கி பாக்ஸ் ஆபிஸ்

24 668bbbbc5ff7e

அதிகாரப்பூர்வமாக வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.. கல்கி பாக்ஸ் ஆபிஸ்

பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. வைஜெந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் கமலின் கதாபாத்திரம் சில நிமிடங்கள் மட்டுமே இப்படத்தில் வந்தது. முக்கிய வில்லனான கமல் இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வருவார் என கூறப்படுகிறது.

கல்கி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வருகிறார்கள். முதல் வாரத்தின் இறுதியிலேயே இப்படம் ரூ. 555 கோடி வரை வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 11 நாட்களை கடந்துள்ள இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 900 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

Exit mobile version