when kajal aggarwal claimed to have denied agreeing to topless photoshoot for fhm india 01
சினிமாபொழுதுபோக்கு

படப்பிடிப்புக்கு தயாராகும் காஜல் அகர்வால்! இணையத்தில் கலக்கும் வீடியோ

Share

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், படப்பிடிப்புக்கு தன்னை தயார் செய்துகொண்டிருக்கும் இவர் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

குதிரையுடன் பயிற்சி எடுக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள இவர் அதனுடன் பதிவை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில், “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளேன். குழந்தைப் பிறப்புக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து நான் வேலைக்கு திரும்பி உள்ளேன். குழந்தைப் பிறப்புக்கு முன்பு என்னால் அதிகமான வேலைகளை செய்ய முடியும்.

ஜிம்மில் வொர்க்அவுட் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை என்னால் செய்ய முடிந்தது. ஆனால், குழந்தைப் பிறப்புக்கு பின்பு முன்பிருந்த அதே எனர்ஜி லெவலை கொண்டு வருவது என்பது கடினமாக உள்ளது.

குதிரை மேல் சவாரி செய்வது எனக்கு பெரும் சவாலாக உள்ளது. நம்முடைய உடல் மாறலாம், மாற நேரம் எடுக்கலாம். ஆனால், நம்முடைய எல்லையில்லாத ஆர்வமும், ஆசையும் என்றும் மாறாதது.

எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய தேர்வு குறித்து என்றும் நாம் கவலைப்படக் கூடாது.

‘இந்தியன்2′ படத்தில் மீண்டும் நான் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. வேலையின் பொருட்டு புதிய திறமைகளை வெறும் பொழுதுபோக்காகக் கருதாமல் கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி. என்னை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு நான் எப்போதும் நன்றி உடையவளாக இருப்பேன்’ என நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த பதிவை பார்த்த பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகின்றார்.

#kajalaggarwal

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4
சினிமாபொழுதுபோக்கு

ஜன நாயகன் ட்ரெய்லரில் கூகுள் ஜெமினி லோகோ: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தளபதி விஜய் பட சர்ச்சை!

தளபதி விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று...

samayam tamil
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வீதி விபத்தில் சிக்கினார்: நாங்கள் நலமாக உள்ளோம் என வீடியோ வெளியீடு!

தமிழ் சினிமாவில் ‘கில்லி’ படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்து மிகவும் பிரபலமான மூத்த நடிகர் ஆஷிஷ்...

24088105 jana tri
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் கடைசி ஆட்டம்: எதிர்பார்ப்பை எகிறவைத்த ஜனநாயகன் டிரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது திரையுலகப் பயணத்தின்...

images 5 2
பொழுதுபோக்குசினிமா

தலைவர் 173: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் இணையும் ‘டான்’ இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில்...