ஜூனியர் என்.டி.ஆர் – பிரசாந்த் நீல் படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறதா? லேட்டஸ்ட் தகவல்!

1760780967 4085

‘கே.ஜி.எஃப்’ திரைப்படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராக உயர்ந்த பிரசாந்த் நீல், அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘சலார்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் அதன் இரண்டாம் பாகம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும், டோவினோ தாமஸ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப் படம் ஆரம்பத்தில் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்தப் படம் அடுத்த ஆண்டு இறுதியில் (2027) ரிலீஸாக வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Exit mobile version