நடிகர் ஜீவா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான “தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. மலையாளத்தில் ‘Falimy’ போன்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் நிதீஷ் சஹதேவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
திரையரங்குகளில் வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் ரிலீஸ் வரிசையில் பல படங்கள் போட்டியிட்ட போதிலும், தரமான திரைக்கதை மற்றும் ஜீவாவின் எதார்த்தமான நடிப்பால் இந்தப் படத்திற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் நாளில் இருந்தே நல்ல வசூலைப் பதிவு செய்து வரும் இப்படம், வரும் நாட்களிலும் கணிசமான வசூலை ஈட்டும் எனத் திரைத்துறை வட்டாரங்கள் கணிக்கின்றன.
ஜீவாவின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியத் திருப்பமாக இந்தப் படம் பார்க்கப்படுகிறது. குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சத்துடன், இயக்குநர் நிதீஷ் சஹதேவின் ஸ்டைலில் உருவாகியுள்ளதால், ‘தலைவர் தம்பி தலைமையில்’ மீண்டும் ஜீவாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது.