நடிகை சீதா வீட்டில் நடந்த மோசமான விஷயம்… போலீஸை நாடிய பிரபலம்
தமிழ் சினிமாவில் ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் என பலருடன் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் சீதா.
அடுத்து நடிகர் சதீஷை மறுமணம் செய்தவர் அந்த திருமணமும் சரியாக அமையாததால் விவாகரத்து பெற்றார். தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள புஷ்பா காலனி பகுதியில் வசித்து வருகிறார்.
தற்போது நடிகை சீதா வீட்டில் வைத்திருந்த 2 1/2 சவரன் ஜிமிக்கி மட்டும் காணாமல் போனதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
வீட்டில் வேலை செய்பவர்கள் யாரேனும் எடுத்திருப்பார்கள் என்கிற சந்தேகத்தில் சீதா இந்த புகாரை அளித்துள்ளார்.