சினிமாபொழுதுபோக்கு

தொடர் தோல்வி.. எமோஷனலாக பேசிய நடிகர் ஜெயம் ரவி

Share
7 24
Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில திரைப்படங்கள் பெரிதும் வெற்றியடையவில்லை.

சைரன், இறைவன், பிரதர் ஆகிய படங்கள் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் , எமோஷனலாக தனது தோல்வி குறித்தும், அதன்பின் கம் பேக் கொடுப்பது குறித்தும் பேசினார் ஜெயம் ரவி.

அவர் கூறியதாவது, வெற்றி இல்லாமல் தோல்வியும் இல்லை, தோல்வி இல்லாமல் வெற்றியும் இல்லை. 2014ஆம் ஆண்டு தோல்வியான நேரமாக இருந்தது. மூன்று வருடங்களாக ஒரே படத்தில் நடித்து வந்தேன். படமும் சரியாக போகவில்லை.

அதன்பின் நான் யோசித்து பார்த்தேன், நான் எதாவது தவறு செய்து இருக்கிறேனா, நான் தவறான கதைகளை தேர்வு செய்தேனா என்று யோசிக்கும்பொழுது, என் தரப்பில் இருந்து எந்த ஒரு தவறும் இல்லை, அப்போது ஏன் நான் துவண்டு போகவேண்டும் என நினைத்தேன்.

அதற்கு அடுத்த வருடம் 2015ல் தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், பூலோகம் என தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்தேன். வெற்றிக்கும் தோல்விக்கு பெரிய வித்தியாசம் இல்லை. ஒருவர் தோல்வியடைந்து கீழே விழுந்துவிட்டால் அது தோல்வியாகிவிடாது. அவர் மீண்டும் எழுந்திருக்காமல் இருந்தால்தான் அது தோல்வி.

அவர் எழுந்துவிட்டால் அது தோல்வியே கிடையாது. இந்த வருடம் நான் மீண்டும் எழுந்துவிடுவேன் என கூற வருகிறேன். ரொம்ப நன்றி, அதற்கான நல்ல கதைகள் என்னிடம் இருக்கிறது, நல்ல திறமையான இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருகிறேன்” என பேசியுள்ளார் ஜெயம் ரவி.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...