சுதா கொங்கரா இயக்கத்தில், பொங்கல் வெளியீடாக இன்று திரைக்கு வந்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில், நடிகர் ஜெயம் ரவியின் (ரவி மோகன்) வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முதல்முறையாக முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். சென்சார் சிக்கல்களைக் கடந்து இன்று வெளியான நிலையில், ரவியின் மிரட்டலான நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
ரசிகர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்த ஜெயம் ரவியின் தோழி கெனிஷா, செய்தியாளர்களிடம் பேசும் போது, ரவி ஹீரோவாக நடித்தால் என்ன, வில்லனாக நடித்தால் என்ன? அவர்தான் இந்த படத்தின் ‘நம்பர் ஒன்’. முதல் பாதியில் அவரை நெகட்டிவ் ரோலில் பார்க்கக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால், இரண்டாம் பாதியில் அவரைத் தாண்டி எதுவுமே இல்லை என்ற எண்ணம் வந்துவிடும்.
இந்த கதாபாத்திரத்திற்காக கடந்த 6 மாதங்களாக அவர் பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும். அவருக்காகவே இந்தப் படத்தை எடுத்தது போலத் தோன்றுகிறது. அரசின் சட்ட திட்டங்களையும் சென்சார் போர்டையும் நான் மதிக்கிறேன். ஒரு வழியாகப் பிரச்சினைகள் முடிந்து படம் வெளியாகி மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி.
ரவி ஏற்கனவே சொன்னது போல, ‘ஜன நாயகன்’ படம் என்று வெளியாகிறதோ அன்றுதான் எங்களுக்குப் பொங்கல் என அவர் உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார்.